tamilnadu

img

மதுரையில் சிபிஐ அலுவலகம் மூடல்

நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதைத்தொடர்ந்து தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து நடந்த பரிசோதனையில் மேலும் இரண்டு சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடரந்து மதுரை ஆத்திக்குளத்தில் செயல்பட்டு வரும் சிபிஐ அலுவலகம் அடுத்த 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.